Mobile

ஜப்பானில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனை ஜப்பானில் வெளியிட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் 6.2 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் எச்டிஆர்10+ ஆதரவு மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

ஜப்பானில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்!

மேலும் இயங்குதளம் என்று கொள்ளும்போது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் பின்புறத்தில் 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 12எம்பி பிரைமரி டூயல் பிக்சல் சென்சார், 64எம்பி hybrid optic 3x zoom லென்ஸ் மற்றும் 10எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

இது 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது. மேலும் இது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

களமிறங்க காத்திருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உடன் அறிமுகமானது நோக்கியா C5 Endi ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil