Mobile

இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனை இந்த மாத இறுதிக்குள் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி, 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானத்துடனான சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவினையும், 20: 9 அளவிலான திரை விகித அளவிலான 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சிப்செட் வசதி எனக் கொள்ளும்போது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC கொண்டதாக இருக்கும்

இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

கேமரா வசதி என எடுத்துக் கொண்டால் 12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சாரினைக் கொண்டதாக இருக்கும்.

இணைப்பு ஆதரவு எனக் கொள்ளும்போது வைஃபை ப்ளூடூத் வி 5.0 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பேட்டரி அளவாக 4,500 எம்ஏஎச் பேட்டரி 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கும்.

Related posts

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil