Mobile

பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தியாவில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போந் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தியாவில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 990 மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு ஆதரவு உள்ளிட்ட வசதி மற்றும் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் மற்றும் 8 மொபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் ஆனது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.1000 வரை எக்சேஞ்ச் வசதி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ!!

TechNews Tamil

அறிமுகமானது Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro!

TechNews Tamil

அதிரடியாக களமிறங்கிய சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்!!

TechNews Tamil