Mobile

வட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் வட கொரியாவில் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் FHD மற்றும் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது. அல்லது ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 6 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், 32 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஆப்டிக்கல் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/NSA Sub6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி 3.1 கொண்டுள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

நைஜீரியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் Oppo A33 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil