சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது.
இந்த கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.
மேலும் கேமராவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, சூப்பர் ஸ்டெடி OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமராவினைக் கொண்டுள்ளது

மற்றும் முன்புறத்தில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது, இது 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.