சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஜனவரி 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 10nmஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.