Mobile

அறிமுகமானது Samsung Galaxy S10 Lite 512 ஜிபி ஸ்மார்ட்போன்!!

Samsung Galaxy S10 Lite 512 ஜிபி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

1.      Samsung Galaxy S10 Lite 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.44,999

Samsung Galaxy S10 Lite  ஸ்மார்ட்போன் மார்ச் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

Samsung Galaxy S10 Lite ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான One UI 2.0 இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது, மேலும் இது 6.7 அங்குல முழு எச்டி மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டு சூப்பர் அமோலேட் பிளஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது Samsung Galaxy S10 Lite 512 ஜிபி ஸ்மார்ட்போன்!!

மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ஆக்டா கோர் SoC கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை Samsung Galaxy S10 Lite ஸ்மார்ட்போன் மூன்று பின்புறத்தில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில், சாம்சங் ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. இது 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த Samsung Galaxy S10 Lite ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் மோட்டோ ஜி பவர் 2022 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அக்டோபர் 17ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஓப்போ கே5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil