Mobile

ஆகஸ்ட் 7 முதல் விற்பனையாகவுள்ள சாம்சங்க் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

Samsung நிறுவனம் அதன் Galaxy Note 10+ ஸ்மார்ட்போனை களமிறக்க தயார் நிலையில் உள்ளது போல் தெரிகிறது.

வெளியான தகவலின்படி, Galaxy Note 10 Plus ஆனது 1440 x 3040 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 6.8 இன்ச் அளவிலான QHD+ டிஸ்ப்ளேவையும், சமீபத்திய Trend ஆன Punch-Hole கேமராவையும் கொண்டிருக்கும். 

ஆகஸ்ட் 7 முதல் விற்பனையாகவுள்ள சாம்சங்க் கேலக்ஸி நோட் 10 பிளஸ்


ப்ராசஸரை பொறுத்தவரை, Exynos 9825 chip கொண்டு இயங்கலாம் (அல்லது உங்கள் பிராந்தியத்தை பொறுத்து Snapdragon 855+ கொண்டு இயங்கலாம்). Galaxy Note 10-ன் ப்ளஸ் மாடல் ஆனது 12GB அளவிலான RAM உடனாக 256GB அல்லது 512GB அளவிலான UFS 3.0 உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும். 



கேமராத்துறையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் அதன் பின்பக்கத்தில் மூன்று கேமரா அமைப்பை பெற்றுள்ளது. இதன் 12MP அளவிலான முதன்மை கேமரா ஆனது f/ 1.5, f/ 1.8 மற்றும் f / 2.4 எனும் Three-step Aperture-ஐ கொண்டுள்ளது. குறைந்த ஒளி நிலைமைகளில் கூட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான f/ 2.1 Aperture கொண்ட 12MP Telephoto Lens ஆனது இரண்டாம் நிலை கேமராவாகவும், Ultra-wide புகைப்படங்களுக்கான f/2.2 Aperture கொண்ட 16MP லென்ஸ் ஆனது மூன்றாம் நிலை கேமராகவும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் 4300 mAh அளவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்பது முன்னரே வெளியானதொரு தகவலாக இருந்தாலும் கூட, சமீபத்திய தகவலானது இது 45W Fast Charging தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

 Samsung Galaxy Note 10 Plus-ன் ஆரம்ப விலை ரூ.76,666/- ஆக இருக்கலாம்.

Related posts

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது ரெட்மி K30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது விவோ வை30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹூவாய் மைமாங்க் 9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil