சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நேற்று அறிமுகமாகியுள்ளது.
இந்த இரண்டு கேலக்சி நோட் ஸ்மார்ட்போன்களும் கடந்த மாதம் நியூயார்க்கில் அறிமுகம் செய்யப்பட்டபோதே இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது.
8GB RAM + 256GB சேமிப்பு என்ற ஒரே அளவு வகையில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது சாம்சங் கேலக்சி நோட் 10. இந்த ஸ்மார்ட்போனிற்கு 69,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அவற்றில் 12GB RAM + 256GB சேமிப்பு அளவை கொண்ட ஒரு வகை 79,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மற்றொரு வகையான 12GB + 512GB மாடலின் விலை 89,999 ரூபாய் ஆகும்.
கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்தவர்கள் 9,999 ரூபாய் மதிப்புள்ள கேலக்சி பட்ஸை 4,999 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் 19,990 ரூபாய் மதிப்பிலான சாம்சங் கேலக்சி வாட்ச் ஏக்டிவை 9,999 ரூபாய் என்ற விலைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.