சாம்சங்க் தற்போது Galaxy Note 10 Lite ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இஞ்ச் முழு ஹெச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது Infinity-O Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இது 10nm octa-core processor கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவே உள்ளது.
இது 8GB RAM கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை, டிரிபிள் ரியர் கேமராவினைக் கொண்டுள்ளது.

இதன் Dual Pixel autofocus, 12 மெகாபிக்சல் சென்சார், 12 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா, 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 32 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 4,500mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை in-display fingerprint கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.