Mobile

இன்று நியூயார்க்கில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10!!

மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் Galaxy Note 10 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீடானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு நியூயார்க்கின் புரூக்ளினில் நடைபெறுகிறது. அதாவது இந்திய நேரப்படி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நடக்கிறது. 


மேலும், Samsung Galaxy Note 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மறுபகையில் உள்ள Samsung Galaxy Note 10 Plus ஆனது 6.8 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஹோல்-பன்ச் செல்பீ கேமராவுடன் வெளியாகும். 

இன்று நியூயார்க்கில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10!!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Samsung Galaxy Note 10 ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.68,000/-க்கும், Note 10 Plus ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.78,000/-க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


வெளியான அறிக்கையில், S-Pen பற்றிய சில அம்சங்களும் கசிந்துள்ளன. இந்த ஸ்டைலஸில் Air gestures மற்றும் கேமரா லென்ஸ்களை மாற்றக்கூடிய திறன் போன்ற புதிய அம்சங்களுடன் வெளியாகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த ஸ்மார்ட்போனில், முதன்முதலாக Audio Zoom microphone-கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. 


முன்னதாக ஆகஸ்ட் 23 அன்று இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று சாம்சங் அதன் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். 

Related posts

தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ளது எல்ஜி Q92 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

5 ஜி ஆதரவுடன் சீனாவில் அறிமுகமானது Honor 30 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil