வருகிற ஆகஸ்ட் 7, 2019 அன்று நியூயார்க்கில் நடக்கும் ஒரு அறிமுக விழாவில் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிப்படுத்தப்படவுள்ளன.
கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே வெளியாகும் சந்தையை பொறுத்து க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 செயலி அல்லது எக்ஸினோஸ் 9825 செயலியை கொண்டு இயங்கும். அமெரிக்க பிராந்தியத்தில், இந்த முறை எக்ஸினோஸ் அடிப்படையிலான கேலக்ஸி நோட் 10 வெளியாகுமென்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 தொடரின் கீழ், 12 ஜிபி ரேம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளதால், கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலிலும் அதை எதிர்பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஆனது 1TB அளவிலான உள்ளடக்கிய சேமிப்பகத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்கப்படக்கூடிய ஆதரவை வழங்கலாம்.
கேலக்ஸி நோட் 10 தொடரின் கீழ் வெளியாகும் இரண்டு
ஸ்மார்ட்போன்களிலுமே பெரிய அளவிலான Screen-to-body ratio இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது லீக்ஸ் தகவல்களுக்கு ஏற்ப இரண்டுமே, Infinity-O ஸ்க்ரீன்களை கொண்டிருக்கலாம். உடன் மிகவும்
மெல்லிய பெஸல்களை தனது நான்கு பக்கங்களிலும் கொண்டிருக்கலாம்.
பிரீமியம் அம்சங்களை கொண்ட
ஸ்மார்ட்போன்கள் என்பதால் விலையும் ‘பிரீமியம்’ ஆகத்தான் இருக்கும். டிப்ஸ்டர் இஷான் அகர்வாலின்
கூற்றுப்படி, கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மாடல் ஆனது 949 யூரோக்களை (தோராயமாக ரூ.73,000) எட்டும். மறுகையில் உள்ள கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடலானது 1099 யூரோக்கள் (தோராயமாக ரூ.84,000)
மற்றும் 1199 யூரோக்கள் (தோராயமாக ரூ.92,000)
என்கிற புள்ளியை எட்டலாம்.