Mobile

தாய்லாந்தில் சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போனை தாய்லாந்தில் வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 6.7 இன்ச் எஸ்-AMOLED+ டிஸ்பிளே மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது 7என்எம் எக்ஸிநோஸ் 9825 சிப்செட் உடன் மாலி ஜி76 ஜிபியு ஆதரவு கொண்டதாகவும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த OneUI 3.1 இயங்குதளத்தை கொண்டதாகவும் உள்ளது.

தாய்லாந்தில் சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி செகன்டரி கேமரா, 5எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு எனக் கொண்டால் சாம்சங் கேலக்ஸி எம்62 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

தென் கொரியாவில் களம் இறங்கியது மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

டிஜிட்டல் கேமிராவுடன் போட்டியிடும் ரெட்மி நோட் 8 Pro!

TechNews Tamil

ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி C17 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil