Mobile

அசத்தலான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்க் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5எம்பி டெப்த் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மெமரி அளவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி கொண்டதாகவும், இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள கூல்பேட் எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகியுள்ள ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் அசரவைக்கும் சலுகைகளுடன் ப்ளிப்கார்ட்டில் விற்பனை!!

TechNews Tamil