Mobile

7000 எம்ஏஹெச் பேட்டரியோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம் 51

சாம்சங் கேலக்ஸி எம் சீரியசில் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குறித்த கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது FHD + தெளிவுத்திறனைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. கேலக்ஸி எம்51 குவாட்-ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டிருக்கும்.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64MP முதன்மை லென்ஸினைக் கொண்டிருக்கும். மேலும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், மேக்ரோ மற்றும் ஆழமான லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

7000 எம்ஏஹெச் பேட்டரியோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம் 51

மேலும் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 செயலி கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் உள்ளமைப்பு வசதியினைக் கொண்டிருக்கும், மேலும் இந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது Android 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

Related posts

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.1000 விலை உயர்வுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil