Mobile

மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் வெளியாகக் காத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ்!!

சாம்சங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றதையடுத்து கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை மேம்படுத்தி  சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் என்ற பெயரில் வெளியிடப்போவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கலாம், மேலும் இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டதாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபிஉள்ளடக்க மெமரி வசதி கொண்டும், மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் வெளியாகக் காத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினையும், 1080பிக்சல்கள் தீர்மானம் கொண்டு இருக்கலாம் என்றும், 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம் என்றும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த போன் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related posts

1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவான விலையில் ஹாத்வே பிராட்பேண்ட் பிளான்.!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil