Mobile

ரூ.14,999 விலையில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

1.      கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 14,999

2.      கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வகையின் விலை- ரூ. 15,999

ரூ.14,999  விலையில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாலி-G72MP3 GPUவினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. LPDDR4x ரேம் மற்றும் 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டதாக உள்ளது, இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், மேலும் முன்புறத்தில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினக் கொண்டுள்ளது.

இது 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

நேற்று அறிமுகமானது விவோவின் அடுத்த சீரியஸ் Vivo NEX 3!!

TechNews Tamil

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

TechNews Tamil

ரீஜார்ஜ் உடன் ஜியோ போன் தீபாவளி 2019 சலுகை!!

TechNews Tamil