Mobile

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனின் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை இது  மாலி-G72MP3 GPU, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும்  சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் கேமராவைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

இது ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

இதன் விலை ரூ. 16499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்குகிறது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஓப்போ ஏ12 எஸ் ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil