3 பின்புற கேமரா அமைப்புடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமரா அமைப்புடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியோமி, ரியல்மீ ஆகியவற்றின் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் ரெட்மி K20 Pro, Mi A3, ரியல்மீ 5 Pro ஆகியவை இதே போன்ற 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் , 3 பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போனின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக இந்த ஸ்மார்ட்போனின் புதிய பேட்டரி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி M30s பண்டிகை காலங்களில் சாம்சங்கின் முக்கிய ஆன்லைன் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம். சாம்சங் இதுவரை கேலக்சி M10, கேலக்சி M20, கேலக்சி M30 மற்றும் கேலக்சி M40 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நான்கு ஸ்மார்ட்போன்களும் மக்களிடம் அமோக வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது. இன்றுவரை இதன் விற்பனை அதிகரித்த வண்ணமே உள்ளது.