Mobile

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போனை பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 420 nits பிரைட்நஸ் வசதியினையும் மெமரி அளவினைப் பொறுத்தவரை கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவினையும் கொண்டுள்ளது.

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதியினையும், மேலும் ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி செகண்டரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

மேலும் இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் இது 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

இது 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சமாக பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டு உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாகக் கொண்டுள்ளது.

Related posts

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி ஆஃபர்கள் அறிவிப்பு.!

TechNews Tamil

நைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன்!

TechNews Tamil