Mobile

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

1. சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வகையின் இந்திய விலை- ரூ. 12,999

இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இது 2340×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை  இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3  பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் இது மாலி-G72MP3 GPU வசதி கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இது 4 ஜி.பி. LPDDR4x ரேம் மற்றும்  64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வசதி கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 20 எம்.பி. செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள விவோ Y20G ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

முதல் முறையாக விற்பனைக்கு வந்த Realme X2 Pro!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil