Mobile

இந்தியாவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது அடுத்த வாரம் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம் 21 2021 எடிஷன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்!

மேலும் இது 1080 பிக்சல் தீர்மானத்தினைக் கொண்டதாகவும், கேமராவாகவும் 48எம்பி பிரைமரி கேமரா, 20எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது எதிர்பார்த்த எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாகவும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

பேட்டரி என்று பார்க்கையில் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி W21 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

டிசம்பர் 16 ஆம் தேதி களமிறங்கவுள்ள விவோ எக்ஸ்30

TechNews Tamil

அறிமுகமானது Oppo F15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil