Mobile

இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங்க் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த  சாம்சங்க் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த சாம்சங்க் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், அட்ரினோ 506 GPU வசதி கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் புளூ, ரெட் மற்றும் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி கொண்டதாகவும் மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 கொண்டதாக உள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும் மற்றும் 15 வாட் அட்பாடிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஹானர் 9X மற்றும் 9X ப்ரோ உடன் பட்ஜெட் Smart TV அறிமுகம்!

TechNews Tamil

ரூ. 15,079 விலையில் அறிமுகமாகியுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil