மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம் 02 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 5.71′ இன்ச் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகின்றது.
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது 1560 x 720 பிக்சல் உடனான ஒன்யூஐ ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் / 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது. மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினையும் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டரையும் கொண்டிருக்கும் என்று தெரிகின்றது.