Mobile

இந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது. கேமரா அளவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது நீலம், சிவப்பு, சாம்பல், கருப்பு போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விற்பனைக்கு வந்தது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங்க் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil