Mobile

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்டதாகவும் மற்றும் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil

அறிமுகத் தயாராக உள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒரு வழியாக அறிமுகமானது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil