சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் துவக்கியது.
கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. யாரும் எதிர்பார்க்காத அளவு, முன்பதிவு தொடங்கிய சில மணித்துளிகளிலே பதிவுகள் முடிந்துவிட்டது.
மொத்தம் 1200 கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்கள் 30 நிமிடத்தில் விற்று சாதனை படைத்துள்ளது.

சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆன இது 7.3 இன்ச் டிஸ்ப்ளே, ஆறு கேமராக்கள், 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இதன் விலை ரூ. 1,64,999 ஆகும். இது 7.3 இன்ச் QXGA உடன் டைனமிக் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் .6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மூலம் இயங்கும் தன்மையானது.
12 ஜி.பி. ரேம் வசதியையும், 512 ஜி.பி. மெமரி, 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, 10 எம்.பி. கவர் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.