Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F23 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி F23 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி 6.6 இன்ச் டிஸ்பிளே, 2408×1080 பிக்சல் FHD+ LCD இன்பினிட்டி யு டிஸ்ப்ளேவுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் அளவாக ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் Snapdragon 750G 8nm பிராசஸர், அட்ரினோ 619 GPU கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F23 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவாக 4GB / 6GB ரேம், 128GB மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஓன் யு.ஐ. 4.1 கொண்டுள்ளது. கேமரா அளவாக 50MP பிரைமரி, 8MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, மற்றும் 8MP செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0 மற்றும் யு.எஸ்.பி.டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000mAh பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil