மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே எச்டி + ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ ஒன் யுஐ கோர் 3.1 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது மெமரி அளவாக 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போன் 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும், 15W சார்ஜிங்க் கொண்டுள்ளது.
கேமரா அளவாக 13 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி கேமரா சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் குவாட் கேமரா கொண்டுள்ளது.
மேலும் இது 4 ஜி எல்டிஇ, வைஃபை
பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5.0 , யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.