மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளேவுடன் 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் அட்ரினோ 506 ஜிபியு கொண்டதாக உள்ளது. மெமரி அளவு என்னும்போது 3ஜிபி/4ஜிபி, 32ஜிபி/64ஜிபி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இது 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு கொண்டதாக உள்ளது. மேலும் இது OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினையும், இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவையும் கொண்டதாக உள்ளது.