சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸினை அன்பேக்டு 2020 நிகழ்வில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த சாதனத்தின் முன்பதிவு துவங்கி உள்ளது.
1. சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் விலை – ரூ. 11,990
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் தனது விற்பனையினை மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளன.
இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் குறித்த விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம். அதாவது இந்த பட்ஸ் ஆனது 2 வழி டைனமிக் ஸ்பீக்கர் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 3 மைக்குகள் கொண்டதாகவும், மேலும் இது மேம்பட்ட அளவிலான தொழில்நுட்ப அம்சங்களுடன் ஆம்பியன்ட் சவுண்ட் அம்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் சுற்றுப்புற சத்தம் குறைக்கப்பட்டு, தேவையான சத்தம் தெளிவாக கேட்கும்படி அமைக்கப்பட்டு இருக்கும்.
இணைப்பு ஆதரவாக ப்ளூடூத் 5 இணைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.
மேலும் அக்செல்லோமீட்டர், ஐ.ஆர்., ஹால், டச் போன்றவற்றினையும் கொண்டுள்ளது. பேட்ட்டியினைப் பொறுத்தவரை 85 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இத்துடன் 270 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ் கொண்டதாக உள்ளது.