Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் QHD மற்றும் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன்!

மெமரி என்று கொண்டால் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 10எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் ஸ்டீயிரோ ஸ்பீக்கர்கள், கைரேகை சென்சார், 5ஜி கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் சி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகக் கொண்டுள்ளது.

Related posts

இந்தோனோஷிய ஷாப்பிங்க் தளத்தில் கசிந்த ஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் விவரங்கள்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

மலேசியாவில் வெளியான ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil