Samsung நிறுவனத்தின் Galaxy A80 இன்று இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கி உள்ளது. கடந்த மாதம் இந்திய அறிமுகத்தை சந்திந்த இந்த ஸ்மார்ட்போன், கடந்த ஜூலை 31 முதல் அதன் முன்பதிவுகளை நிறுத்திக்கொண்டது.
இன்று தொடங்கி சாம்சங் நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தளம், ஆஃப்லைன் கடைகள் மற்றும் முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களின் வழியாக Samsung Galaxy A80 விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ80 ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஒற்றை மெமரி வேரியண்ட்டில் மட்டுமே வெளியாகியுள்ளது. ரூ.47,990/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் Angel Gold, Ghost White மற்றும் Phantom Black போன்ற வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ80 ஆனது One UI அம்சங்களை கொண்ட Android Pie கொண்டு இயங்குகிறது. 1080 x 2400 பிக்சல்கள் மற்றும் 20:9 திரை விகிதம் கொண்ட 6.7-inch full-HD+ Super AMOLED எனும் New Infinity Display-வை கொண்டுள்ளது.
கேமராத்துறையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ80 சுழலும் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
சேமிப்பகத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ80 ஆனது 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பிடத்தை கொண்டுள்ளது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4G VoLTE, வைஃபை 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C போன்றவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25W fast charging ஆதரவு கொண்ட ஒரு 3,700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.