Mobile

ரூ.29,999 விலையில் அறிமுகமானது Samsung Galaxy A71 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

1.   கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வகையின் விலை-  ரூ.29,999

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

ரூ.29,999 விலையில் அறிமுகமானது Samsung Galaxy A71 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 12வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11ஏசி,புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

வெளியானது Samsung Galaxy Note 10 Lite!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் களமிறங்கிய லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் வெளியான Vivo Z5i

TechNews Tamil