Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஸ்மார்ட்போனாக இருந்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டானது விரைவில் இந்தியாவில் உள்ள கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி கொண்டதாகவும் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 34ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி /32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி டூயல் ரியர் கேமராவினைக் கொண்டுள்ளது, இதன்மூலம் 4கே வீடியோவினை பதிவு செய்ய முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ஸ்விட்சர்லாந்தில் களம் இறங்கியுள்ள மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

Android 10 அப்டேட் பெற்றுள்ள Motorola One Power!

TechNews Tamil

ஜூலை 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகமாகிறது ரியல்மி 6 ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil