Mobile

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த  சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்  குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு  இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான சாம்சங்  கேலக்ஸி  ஏ52  ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் வெள்ஸ் லென்ஸ் ,  5எம்பி டெப்த் சென்சார்,  5எம்பி மேக்ரோ லென்ஸ் என  நான்கு கேமராக்களையும் மற்றும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை  கைரேகை சென்சார்  ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என எடுத்துக் கொண்டால் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் களம் இறங்கிய லாவா இசட் 1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நாளை வெளியாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil