மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது இணைய தளத்தில் கசிந்து உள்ளன. இந்த கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் குறித்து கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த கேலக்ஸி ஏ52 ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.
மேலும் இந்த கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வசதி கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.
கேமரா அளவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் கொண்டதாகவும் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கும் என்றும் தெரிகின்றது.