Mobile

பிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ51 என்ற ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாதத் துவக்கத்தில்  இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி மற்றும் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இந்த கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி சி17 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

செப் 24 இல் வெளியாகிறது சியோமி 108MP Camera!!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil