Mobile

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ50 எஸ்!!

சாம்சங் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர், Galaxy A50s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் தொழில்நுட்பம் மற்றும் மலிவு விலையின் காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பினைப்  பெற்றது.

தற்போது இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த அப்டேட் தற்போது வியட்நாமில் உள்ள Galaxy A50s ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1.      சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போனின் 4GB RAM வகையின் விலை – 22,999 ரூபாய்

2.      சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போனின் 6GB RAM வகையின் விலை – 24,999 ரூபாய்

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ50 எஸ்!!

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப்  பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டா-கோர் சாம்சங் எக்சினோஸ் 9611 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 4GB மற்றும் 6GB அளவிலான RAM, மற்றும் 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது.

இது 4,000mAh அளவிலான பேட்டரியினைக் கொண்டுள்ளது.

Related posts

நாளை விற்பனையைத் துவக்கவுள்ள Realme 5s!

TechNews Tamil

வெளியானது சியோமி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி

TechNews Tamil

பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகமாகும் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil