Mobile

அதிரடியாக களமிறங்கிய சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்!!

அறிமுகமானது:

சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர், Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் தொழில்நுட்பம் மற்றும் மலிவு விலையின் காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பினைப்  பெற்றது.

விலைப் பட்டியல்:

  1. சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போனின் 4GB RAM பேஸிக் வேரியண்ட் – 22,999 ரூபாய்
  2. அடுத்த வேரியண்ட் 6GB RAM – 24,999 ரூபாய்
அதிரடியாக களமிறங்கிய சாம்சங் Galaxy A50s சிறப்பம்சங்கள்!!

கேமிரா:

சாம்சங் Galaxy A50s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் full-HD யுடன் 1080×2340 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டுள்ளது, கேமராவினைப்  பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமராவை போன்றவையும் அடக்கம்.

மேலும் இது ஆக்டா-கோர் சாம்சங் எக்சினோஸ் 9611 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. இதனுடன் AMOLED இன்பினிட்டி ஸ்கிரீனும் உள்ளது.

மெமரி:

மெமரியினைப் பொறுத்தவரை 4GB மற்றும் 6GB அளவிலான RAM, மற்றும் 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது. 

இது 4,000mAh அளவிலான பேட்டரியினைக் கொண்டுள்ளது.

Related posts

நெட்ஃப்ளிக்ஸ் சந்தா : இனி 199 ரூபாயில் படம் பார்க்கலாம்!

TechNews Tamil

மலிவு விலையில் லாவா ஃபீச்சர் போன் அறிமுகம்!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ எஸ்1 பிரைம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil