Mobile

உலக சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் ஜப்பானில் மார்ச் மாதம் 19 ஆம் தேதி அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி A41 என்ற புதிய ஸ்மார்ட்போனை தற்போது உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

1. சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போனின் விலை – இந்திய மதிப்பில் ரூ.24,670

இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஃபுல் எச்டி உடன் இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆன்போர்டு உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் SoC மூலம் குவால்காம் அலகா அல்லது எக்ஸினோஸ் சிலிக்கானா கொண்டுள்ளது.

உலக சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது, அதாவது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 25 மெகாபிக்சல் கேமரா கொண்டு உள்ளது. இந்த கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் ஆனது, 3,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

LG K31 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வெளியிட்டது எல்ஜி நிறுவனம்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி A01 ஸ்மார்ட் போன்!

TechNews Tamil

நாளை சீனாவில் களம் இறங்குகின்றது ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil