Mobile

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் ஆனது ஜப்பானில் அறிமுகம் ஆகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விலை விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களைப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஃபுல் எச்டி உடன் இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆன்போர்டு உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் SoC மூலம் குவால்காம் அலகா அல்லது எக்ஸினோஸ் சிலிக்கானா கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது, அதாவது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது.

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

மேலும் முன்புறத்தில் 25 மெகாபிக்சல் கேமரா கொண்டு உள்ளது. இந்த கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன் ஆனது, 3,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகமாக உள்ள எம்ஐ நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அமெரிக்காவில் அறிமுகமாகிறது மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள IQOO 7 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil