மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஐரோப்பியாவில் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 எஸ்ஓசி மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஎஃப்டி இன்பினிட்டி-வி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் எஸ்ஓசி செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் கொண்டதாகவும் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக் கூடியதாக உள்ளது.

இது கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளுடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆதரவினைக் கொண்டு உள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.