மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் வெளியாகியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, ப்ளூ, வெள்ளை மற்றும் வயலட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி வசதி மற்றும் எச்டி ப்ளஸ் 720 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா முன்பக்கத்தில் 13 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் சிப்செட் வசதியினைப் பொறுத்தவரை மீடியா டெக் டைமன்சிட்டி 720 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது. இயங்குதளத்தினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் 5ஜி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 15 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.