Mobile

ஒரு வாரத்தில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன் உலகின் பலநாடுகளிலும் அறிமுகமாகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜுன் மாதம் 7 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாய் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளேவினையும், 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி மற்றும் 6 ஜிபி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ஒரு வாரத்தில் களமிறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன்!!

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 25 எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், இன்ஃராரெட் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைபை, புளூடூத் 5 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசர வைக்கும் அம்சங்களுடன் எல்ஜி கே61 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

ஜியோவை அதிரடிக்க ஏர்டெலில் 1.5 ஜி.பி. டேட்டா

TechNews Tamil