Mobile

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இது இந்த மாத இறுதிக்குள் உலக சந்தைகள் முழுவதிலும் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுடுள்ளது. மேலும் இது 25எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனதுஇரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5,ஜிபிஎஸ், க்ளோனாஸ்,சாம்சங் பே, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil