Mobile

ஒருவழியாக அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்தன்மை கொண்டுள்ளது.

ஒருவழியாக அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுடுள்ளது. மேலும் இது 25எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனதுஇரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5,ஜிபிஎஸ், க்ளோனாஸ்,சாம்சங் பே, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

இனிமேல் வரம்பற்ற அழைப்புகள் பிஎஸ்என்எல் இல் கிடையாது!!

TechNews Tamil

புதிய அப்டேட்டுடன் களம் இறங்கியுள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கொரியாவில் களம் இறங்கியது LG நிறுவனத்தின் Q31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil