அறிமுகமானது:
சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர், Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதன் தொழில்நுட்பம் மற்றும் மலிவு விலையின் காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.
விலைப் பட்டியல்:
- சாம்சங் Galaxy A30s ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB சேமிப்பு வேரியண்ட் – 16,999 ரூபாய்

கேமிரா:
சாம்சங் Galaxy A30s ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் full-HD யுடன் 720×1560 பிக்சல் தீர்மானத்தைக் கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 25 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 123 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவை போன்றவையும் அடக்கம்.
மேலும் இது இன்பினிட்டி V நாட்ச் திரையினைக் கொண்டுள்ளது. Galaxy A30s ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் சாம்சங் எக்சினோஸ் 7904 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது.
மெமரி:
மெமரியினைப் பொறுத்தவரை 3GB மற்றும் 4GB அளவிலான RAM, மற்றும் 32GB, 64GB மற்றும் 128GB சேமிப்பு அளவு ஆகிய வகைகளை கொண்டுள்ளது.
இது சாம்சங் Galaxy A50s போல 4,000mAh அளவிலான பேட்டரியினைக் கொண்டுள்ளது.