சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.
இந்த புதுப்பிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்கானிஸ்தான், ஈராக், லாவோஸ், லிபியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் இந்த புதுப்பிப்பு அடுத்தமாதம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவினையும், 720 x 1,560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதி கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 9பை வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்த கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 25எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
இந்த கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,என்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.