Mobile

ரஷ்யாவில் சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் வெளியாகி உள்ளது. கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எஃப்எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதி, 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடடெக் Dimensity 700 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ரஷ்யாவில் சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விற்பனையைத் தொடங்கிய Nubia Red Magic 3S!

TechNews Tamil

சூப்பரான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil